இப்படியும் ஒரு கொடுமையா? ஒரே நாளில் 19 பேர் பலி

0
1222
19 people killed Andhra telangana

(19 people killed Andhra telangana)
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கோடை வெயில் 100 டிகிரிகளை கடந்துள்ளதனால் ஒரே நாளில் மாத்திரம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோடை வெயில் காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் கடந்த வருடத்தை விட 3 முதல் 4 டிகிரி வரை அதிக வெயில் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக கடப்பா, குண்டூர், அனந்தப்பூர், சித்தூர் ஆகிய ராயலசீமா பகுதிகள் மற்றும் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய கடலோர பகுதிகளிலும் கிருஷ்ணா, பிரகாசம், கோதாவரி ஆகிய ஆந்திரா பகுதிகளிலும் அதிகளவில் உஷ்ண நிலையதக மாறி வருகின்றது.

இதன் காரணமாக முதியோர், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதேபோன்று தெலங்கானா தலைநகரம் ஹைதாராபாத்திலும் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெயில் பதிவாகி வருவதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஹைதராபாத்தை சுற்றியுள்ள ஏனைய மாவட்டங்களில் அதிகளவில் வெப்ப நிலை பதிவாகியுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் மாத்திரம் தெலங்கானா மாநிலத்தில் 12 பேரும், ஆந்திராவில் 7 பேரும் வெயில் கொடுமை காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் பல பகுதிகளில் சுட்டெரிக்கும் அனல் காற்று வீசி வருவதுடன், நண்பகல் வேளைகளில் பொதுமக்கள் குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகளை வெளியே செல்ல வேண்டாம் என்றும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; 19 people killed Andhra telangana