கோவிலுக்கு வெளியே விரட்டப்பட்ட பெண்! தலைவிரித்தாடும் சாதிய கொடுமை!

0
738
Tamil Nadu Girl Stop Enter Amman Temple Issue

(Tamil Nadu Girl Stop Enter Amman Temple Issue)

இந்தியாவின் புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத தீமிதி திருவிழாவுக்கு சென்ற அதே ஊரைச் சேர்ந்த 30 வயதான ராதா என்னும் பெண்ணை சாமி தரிசனம் செய்யவிடாது துரத்தியடித்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்ட திருவிழாவில் திருமணமாகாத குறித்த பெண்ணை நுழையவிடாமல் தடுத்த போது ,வேதனை அடைந்த பெண் ராதா அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சாமியின் திருக்கல்யாணத்தை பார்த்தாலாவது தனக்கு திருமணம் கைகூடி வரும் என வந்தேன் ஆனால் ஏன் என்னை தடுக்கிறீர்கள் என கேட்டார்.

அந்த பெண்ணுக்கு ஆதரவாக சிலர் பேசினார். இதனால் இரு தரப்புக்கும் மோதல் முற்றிய நிலையில் ராதாவை எதிர் தரப்பினர் மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தை ஒரு வாலிபர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார்.

கோவிலுக்குள் செல்ல பெண்ணுக்கு அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து திருக்கனூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரவுபதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்து இருப்பது சாதிய தீண்டாமை கொடுமை ஆகும்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்