இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
639
Today Horoscope 06-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 22ம் தேதி, ஷவ்வால் 21ம் தேதி,
6.7.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 8:59 வரை;
அதன்பின் நவமி திதி ரேவதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:06 வரை;
அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம்
பொது : தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு.

.

மேஷம்:

சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். நீண்ட காலக் கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

 

ரிஷபம்:

மனதில் சஞ்சலம் வந்து விலகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

மிதுனம்:

தவறைத் திருத்திக் கொள்ள முயல்வீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பெண்கள் வாழ்வில் இனிய அனுபவம் காண்பர்.

கடகம்:

புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் உண்டாகும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

சிம்மம்:

சிலர் சுயநலத்துடன் உங்களை அணுகலாம். தொழில், வியாபாரத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் கவனமுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி கிடைக்கும்.

கன்னி:

உங்கள் பேச்சில் வசீகரம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். ஆதாயம் உயரும். பெண்கள் தர்ம சிந்தனையுடன் செயல்படுவர்
.

துலாம்:

பேச்சு, செயலில் நிதானம் தேவை. தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சுபவிஷயத்தில் பொறுமை காக்கவும்.

விருச்சிகம்:

ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். வருமானம் உயரும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பணியாளர்கள் பதவி உயர்வு பெற அனுகூலம் உண்டு.

தனுசு:

சவால்களை ஏற்று தடைகளை தகர்த்தெறிய முயல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் சாதனை படைப்பீர்கள். வருமானம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்..

மகரம்:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

கும்பம்:

மனதில் அதிருப்தி உருவாகி மறையும். தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். பிறருக்காகப் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.

மீனம்:

புத்தி சாதுர்யத்தால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உண்டாகும். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்