நீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா

0
1078
Kanavu palangal Today Horoscope

ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு தோன்றுகிறது .அந்த கனவுகள் யாவும் அந்த மனிதன் அன்றைய நாள் தோறும் செய்யும் செயல்களை பொருத்ததாகவும் அதன் வெளிப்பாடகவும் அமையும் . அப்படி காணும் கனவுகள் நன்மை தருவதாகவும் இருக்கும் தீமை தருவதாகவும் இருக்கும் . மேலும் இவை யாவும் பலிக்குமா என்ற சந்தேகமும் இருக்கும் . அதை பற்றி என்ன சொல்கிறது கனவு சாஸ்திரம் .(Kanavu palangal Today Horoscope )

இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

பகலில் காணும் கனவுக்கு பலனில்லை இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.

மனிதன் ஒவ்வொரு இரவும் இறந்து மீண்டும் மறுநாள் பிறக்கின்றான்” என்று.கூறப்படுகிறது .தூக்கத்தில் கனவுகள் வருவது வழமை. கனவு என்பது என்ன? எங்களின் நினைவுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருவதாக உளவியல் ஆராட்சியாளர்கள் கூறுகின்றார்கள். இள வயதினர்க்கு காதல் கனவுகளே அதிகமாக வருமாம். சினிமா பார்த்துவிட்டு வந்து தூங்கினால் கனவில் அந்தப் படத்தின் கதாநாயகனோ, அல்லது கதாநாயகியோ கனவில் தோன்றுவார்களாம். அவரவர்களின் நினைவுகளே கனவுகள்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Keyword:Kanavu palangal Today Horoscope