சிக்குவாரா மஹிந்த?

0
577
tamilnews Mahinda Rajapaksa portrays victims Tamils assassins

நிவ்யோர்க் டைம்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். New York Times Revelations

இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இவ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக, சீன துறைமுக நிறுவனத்தால் சுமார் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியாக வழங்கப்பட்டதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

குறித்த செய்தியானது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.