(hubert cecil booth google doodle 147th birthday)
தூசுக்களை உறிஞ்சி அகற்றி நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும் கருவி வேக்யூம் க்ளினர். தற்போதைய காலங்களில் வேக்யூம் க்ளினர் இல்லாத வீடுகள், அலுவலகங்களே இல்லை என்று கூறலாம்.
இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத உபயோக பொருளாக மாறிவிட்ட வேக்யூம் கிளீனர் 1901ம் ஆண்டில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை உருவாக்கியவர் ஹியூபர்ட் செசில் பூத்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களுக்கான பொருட்காட்சி லண்டனில் நடைபெற்றது. அதனால் மிகவும் ஈர்க்கப்பட்ட பூத், விரைவிலேயே கண்டுபிடித்த கருவி தான் வேக்யூம் கிளீனர். எனவே இவரை நினைவு கூறும் விதமாக இன்று கூகுள் தமது டூடுளில் இவரது படத்தை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
hubert cecil booth google doodle 147th birthday