”புதிய காற்று” படம் மூலம் அறிமுகமான நடிகை ஆமனி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.(Aamani talk casting couch Tamil Telugu film industries)
தமிழில் சரத்குமாரின் ”இது தான்டா சட்டம்”, விஜயகாந்தின் ”ஹானஸ்ட் ராஜ்” உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளதுடன், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதா..? என்று ஆமனியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் தெலுங்கு மட்டும் இல்லை தமிழ் திரையுலகிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்றார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.. :-
”நான் நடிக்க வந்த புதிதில் புதிய தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து போன் அழைப்புகள் வந்தன. என்னை தனியாக கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொன்னார்கள். அவர்கள் எதற்காக அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டதால் நான் செல்லவில்லை.
அத்துடன், படுக்கைக்கு அழைத்து வரும் போன் கால்கள் எல்லாம் புதிய நிறுவனங்களில் இருந்து தான் வந்தன. பிரபலமான இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ அப்படி அழைத்தது இல்லை” என ஆமனி தெரிவித்தார்.
ஆமனி பாலகிருஷ்ணா, நாகர்ஜுனா, விஜயகாந்த், மம்மூட்டி உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்த நிலையில் ஆமனி அதை உறுதி செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், நடிகை ஸ்ரீ ரெட்டி படுக்கைக்கு அழைப்பது குறித்து துணிச்சலாக பேசியதுடன், அதற்கு எதிராக போராடியும் வருகின்றார். அவரின் செயலை பார்த்து பிற நடிகைகளும் தைரியமாக பேச ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
<MOST RELATED CINEMA NEWS>>
* நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல பாலிவுட் நடிகரின் மகன் : பரபரப்புத் தகவல்..!
* என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!
* மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!
* உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!
* ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!
* அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!
* ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!
* காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!
* இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!
Tags :-Aamani talk casting couch Tamil Telugu film industries
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-