”என்னமோ நடக்குது” பட இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.(Arvind Swamy next film director Announcement)
அதாவது, தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடல் படத்தில் நடித்தார் அரவிந்தசாமி. அடுத்ததாக வெளியான “தனி ஒருவன்” படத்தில் வில்லனாக நடித்தார். அது மிகப்பெரிய ஹிட்டானது.
ஹீரோ ஜெயம் ரவியைக் காட்டிலும், வில்லனாக நடித்த அரவிந்த் சாமிக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அவர் நடித்த வேடத்தைப் பெரும்பாலான இளைஞர்கள் கொண்டாடினர்.
அதைத்தொடர்ந்து, அவருக்கு படங்கள் மளமளவென குவிந்தன. இறுதியாக வெளியான மலையாள பட ரீமிக்கான ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படம் பெரியதாக போகவில்லை. அதனால் ஒவ்வொரு படங்களையும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது, “சதுரங்க வேட்டை 2”, “நரகாசூரன்”, “செக்கச் சிவந்த வானம்”, “வணங்காமுடி” ஆகிய தமிழ்ப் படங்களும், “மாமாங்கம்” என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதிய தமிழ்ப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த் சாமி. இந்த படத்தை “என்னமோ நடக்குது”, “அச்சமின்றி” ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்க உள்ளார்.
செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில் நடிக்க, முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிற தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் அதிகார பூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
<MOST RELATED CINEMA NEWS>>
* நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல பாலிவுட் நடிகரின் மகன் : பரபரப்புத் தகவல்..!
* மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!
* உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!
* ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!
* அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!
* ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!
* காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!
* இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!
Tags :-Arvind Swamy next film director Announcement
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-