திரிபோலியின் காரபவுலியில்; அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகள் நோக்கி சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Libya sea place refuges boat accident hundred people missing
குறித்த படகின் இயந்திரம் திடீரென தீப்பற்றிக்கொண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மீனவர்கள் லிபியாவின் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலோர பாதுகாப்பு படையின் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படகில் மொத்தம் 120 அகதிகள் சென்றுள்ளதாகவும் அவர்களில் 16 பேரை கடற்படையினர் மீட்டுள்ளதோடு 100 பேர் என்ன ஆனார்கள்? என தெரியவில்லை எனவும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை 3 குழந்தைகளின் சடலங்கள் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் பயணம் செய்தவர்கள் மொராககோ, காம்பியா, ஜாம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்தும் கடற்பரப்பில் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- Libya sea place refuges boat accident hundred people missing
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?