உலக்கையால் தாக்கி தனது கணவனை கொலை செய்த மனைவி ஒருவரை நிவிதிகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (Wife’s assault Husband killed)
நிவிதிகலை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிபோதையில் வீட்டிற்குச் சென்ற தனது கணவன் தன்னை தினமும் துன்புறுத்துவதாகவும் சந்தேக நபரான உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனக்கும் கணவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் குறித்த பெண் தனது கணவனை உலக்கையால் தலையில் தாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காயமடைந்த கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளதோடு, உயிரிழந்தவரின் சடலத்தை கலவான வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இன்றைய தினம் பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
tags :- Wife’s assault Husband killed
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க ரத பவனி வந்தாள் நாகபூஷணி!
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!