அரசாங்க நிறுவனமொன்றில் நடந்த சம்பவம் : அம்பலத்திற்கு வந்தது

0
523
Girl Passport Office Video

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் ஊழியரொருவர், பெண்ணொருவரை ஆபாசமாக படமெடுத்த காணொளி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.(Girl Passport Office Video)

இந்த சம்பவத்தை அங்கு அமர்ந்திருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில், பெண் ஒருவர் முழங்கால் அளவு உடை ஒன்றை அணிந்து வந்து வர்த்தக நிலையத்தில் பொருட்களை வாங்க நின்று கொண்டிருக்கிறார்.

அந்த பெண்ணின் பாதத்திற்கு அருகில் கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி ஒன்று எடுக்கப்படுகின்றது.
அந்த வர்த்தக நிலையத்தில் கடமைபுரியும் ஊழியர் ஒருவரே மிகவும் சூட்சுமமான முறையில் பெண் நிற்கும் இடத்தில் தனது கையடக்கத் தொலைபேசியை தனது காலில் வைத்து காணொளியை பதிவு செய்துள்ளார்.

அரசாங்க நிறுவனமொன்றில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் பலரும் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளதோடு இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறித்த காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- Girl Passport Office Video

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites