அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 72 மணித்தியாலங்களில் தீர்வு வழங்கினோம் – ரங்கே பண்டார 

0
488
tamilnews 72 hours resettle affected natural disaster victims

(tamilnews 72 hours resettle affected natural disaster victims)

கடந்த மாதங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 72 மணித்தியாலங்களில் தீர்வை பெற்றுக் கொடுத்ததாக நீர்பாசன, நீர்முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அவசிமாயன அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் ஊடாக இந்த பிரதிபலன் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் தம்பேதென்ன கிராமத்தில் 65 குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் டிந்த கருத்துக்களை வெளியிட்டார்.

பதுளை – வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இதல்கஸ்ஹின்ன பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களுக்கு உள்ளான 43 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தம்பேதென்ன பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

அவர்களின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடமைப்பு திட்டம் கடந்த வாரம் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் புகையிரதத்திலும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews 72 hours resettle affected natural disaster victims)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites