காவி உடையை கழற்றுவது பௌத்த கௌரவத்திற்கே பாதிப்பு – ஜயந்த சமரவீர

0
1137
Jayantha Samaraweera suffering Buddhist dignity

பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பை செயற்படுத்தும் போது காவியுடையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (Jayantha Samaraweera suffering Buddhist dignity)

அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீரவினால் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கு இது தொடர்பாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக விமர்சனம் தெரிவிக்க எமக்கு சட்டப்படி உரிமை கிடையாது. ஆனால் அந்தத் தேரர் தேசிய விடயம் தொடர்பான வழக்கொன்று தொடர்பாகவே தண்டனை அனுபவிக்கின்றார். இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கருத்துகளுக்கமைய அவர் தண்டனையை அனுபவிக்கும் காலத்தில் அவர் காவியை அணிந்திருப்பதற்கு உரிமையில்லையெனக் கூறப்படுகின்றது. அவ்வாறு நடந்தால் அது பௌத்த கௌரவத்திற்கு பாதிப்பாக அமையும். இது சர்வதேச நாடுகளின் தேவைகளை நிறைவேற்றுவது போன்றும் அமைந்துவிடும்.

நாட்டில் சட்ட திட்டங்கள் சமூகப் பெறுமதியுடையதாகவே இருக்கும். நாட்டின் தலைவருக்கு அரசியலமைப்பின் ஊடாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக தனது அபிப்பிராயத்திற்கமைய ஆராயமுடியுமாக இருப்பதும் அதனாலேயே.

இந்நிலையில், ஞானசார தேரரின் தண்டனை காலத்தில் அவரின் காவி உடையை அகற்ற இடமளிக்க வேண்டாமென சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. அவர் செயற்பாடு தொடர்பாக ஏதேனும் விருப்பு, வெறுப்புகள் இருந்தாலும் அவற்றைக் கருத்திற் கொள்ளாது பௌத்த காவியின் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

tags :- Jayantha Samaraweera suffering Buddhist dignity

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites