நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவப் பெருவிழா!

0
1638
Nainativu Nagapooshani Amman Temple festival

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (Nainativu Nagapooshani Amman Temple festival)

தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இந்த ஆலய மஹோற்சவத்தின் பத்தாம் திருவிழா ஜூன் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை பகல் சிவபூசைக் கைலைக்காட்சியும் இடம்பெறவுள்ளது.

அத்துடன், இரவு திருமஞ்சத் திருவிழாவும், 13 ஆம் திருவிழாவான 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கைலைக் காட்சியும், இரவு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் மறுநாள் திங்கட்கிழமை இரவு பூங்காவனம், தெப்போற்சவவும் இடம்பெறவுள்ளன.

tags :- Nainativu Nagapooshani Amman Temple festival
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites