Married Teacher elopes Student
ஆசிரிய – மாணவ உறவு புனிதமானது. பெற்றோருக்கு பின்னர் உன்னதமான உறவாக கருதப்படுவது இவ்வுறவு. ஆனால் சிலருக்கு அது புரிவதில்லை.
அவ்வாறானதொரு சம்பவமே இது.
வீட்டை விட்டு ஓடிய மாணவன் மற்றும் ஆசிரியை ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின், மிசிசிப்பியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிக்கோல் ஜெக்சன் என்ற 30 வயது ஆசிரியையும், 16 வயதான ஒஸ்கார் ஓ’நீல் என்ற மாணவனுமே வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த ஆசிரியை ஏற்கனவே பாலியல் குற்றசாட்டில் சிக்கியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பிணையில் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே,மாணவன் ஒருவருடன் மாயமாகியுள்ளார்.
தனது மகன் தொடர்பில் தகவல் தருமாறு , மாணவனின் தந்தை பேஸ்புக்கில் உணர்ச்சிபூர்வமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை கடந்த சில மாதங்களாக மாணவனுடன் உறவைப் பேணி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .குறித்த ஆசிரியை ஏற்கனவே திருமணமானவர் என சுட்டிக்காட்டப்படுகின்றது.