சிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு

0
751
Sydney Rail Light Project

 

சிட்னியில் சிட்டி லைட் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு மின்சாரம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sydney Rail Light Project

15 வயதான அனா லெம்ப்டன், என்ற யுவதி கடந்த ஞாயிறன்று ஹேமார்கட் பகுதியில் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார்.

ரயில் திட்ட நிர்மாணம் இடம்பெற்று வரும் பகுதியில் வைத்து மின்சார தாக்குதலுக்குள்ளாகியிருந்தார்.

அறுந்துகிடந்த மின்சாரக் கம்பியில் காலை வைத்தமையாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது விழுந்து கிடந்த அப்பெண்ணை தூக்கி காப்பாற்ற முயன்றவர்களும் மின்சார தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்லவெனவும், கட்டிட வேலையில் ஈடுபட்டவர்களின் கவனயீனமே இதற்கான காரணமென முதல்வர் தெரிவித்துள்ளார்.