400 கோடி ஏ.டி.எம்.(ATM) பண மோசடி: முக்கிய குற்றவாளி கைது!

0
779
400 crore ATM cash withdrawal, india tamil news, india news, india amil seidhi, ATM,

400 crore ATM cash withdrawal }

புதுச்சேரியில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக போலீஸாருக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் வங்கிக் கணக்கிலிருந்து போலி ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்க படுவதை கண்டறிந்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாக புதுச்சேரியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சந்துருஜியை சிபிசிஐடி போலீஸார்  தேடி வந்தனர்.

இந்நிலையில் ஏ.டி.எம். மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கு உதவிய சிவக்குமார், கணேஷ், டேனியல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் சந்துருஜி உதவியாளர் அப்துல் சமதுவும் கைதானார். மேலும்  இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சத்யா என்பவரை சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், 5 ஏ.டி.எம். ஸ்வைப்பிங் இயந்திரங்களை சந்துருஜியிடம் அவர் தந்துள்ளது தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்து  ரூ.1 லட்சம் ரொக்க பணம், பல வங்கிகளின் கணக்குப் புத்தகங்கள், காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி  போலீசார் ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் பல மாதங்களாக பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags: 400 crore ATM cash withdrawal

< மேலதிக இந்திய செய்திகள் >>

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

*பல மாணவர்களின் உயிரை குடித்த மருத்துவ படிப்பு: விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்!

*ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com