பொறியியல் பிரிவில் சாதனை படைத்த 16 வயது மாணவி..!

0
517
16-year-old student engineering section

(16-year-old student engineering section)

தெலங்கானா மாநிலத்தின் மிக இளம் வயதில் பொறியியல் பட்டம் பெற்று 16 வயது  சிறுமி சாதனைப்  படைத்துள்ளார்.  தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்தைச்  சேர்ந்தவர்  ஷமிதா என்ற சிறுமி, 4 வயதில் 10ம் வகுப்பை முடித்தபோது நாடு முழுவதும் அறிமுகமானவர்.

இதனைத்தொடர்ந்து பொறியியல் படிப்பில் சேர அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தன் 12வது வயதில் இணைந்தார்.  தற்போது தன் 16வது வயதில் பொறியியல் பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.  இதன்  மூலம்  தெலங்கானா மாநிலத்தில் மிக இளம்  வயதில் பொறியியல் பட்டம்  பெற்றவர்  என்ற பெருமையை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மேலும் , பட்டம் பெற்று சாதனை படைத்துள்ள அச்சிறுமி, எரிசக்தி  துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்,  அத்துறையில் இந்தியாவை உலகிலேயே சிறந்த நாடு என்ற பெருமையை பெற செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

tags;-16-year-old student engineering section

More Tamil News

Tamil News Group websites :