பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்திப்பு

0
534
Prime Minister Narendra Modi Governor Panwarilal Purohit Delhi

Prime Minister Narendra Modi Governor Panwarilal Purohit Delhi

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற பன்வாரிலால் புரோகித் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். 2 நாள் மாநாட்டுக்குப் பிறகு அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஆளுநர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இல்லத்திற்கு சென்ற பன்வாரிலால், பிரதமருடன் தமிழக அரசியல் நிலவரம், தூத்துக்குடி கலவரம், காவிரி ஆணையம் போன்ற பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு தனி அறையில் நிகழ்ந்ததால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Prime Minister Narendra Modi Governor Panwarilal Purohit Delhi

More Tamil News

Tamil News Group websites :