பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்

0
731
1000 MW Power Project poonakary kilinochchi

பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி  கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக,  சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi)

“இந்தத் திட்டத்துக்கான காணிகளை அளவீடு செய்யும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் இப்போது ஈடுபட்டுள்ளோம்.

திட்டத்துக்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு போட்டி ஏலம் விடும் முறையை கையாளுவோம்.

அதேவேளை, 100 மெகாவாட் திறன் கொண்ட இன்னொரு காற்றாலை மற்றும்  150 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின்திட்டங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் உருவாக்கப்படும்.

இதில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை