3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக தகவல்

7
1006
Sri Lankan Military Returns Part Land Acquired War North tamilnews

யுத்த காலத்தில், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த, பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் அதிகளவானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

27 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 3 ஆயிரத்து 467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக பாதுகாப்புப் பிரிவு கூறியுள்ளது.

இதேவேளை, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில், யுத்தத்தின் பின்னர் இதுவரை 23 ஆயிரத்து 533 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில், பொதுமக்களுக்குச் சொந்தமான 683 ஏக்கர் காணி, புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :