Rajinikanth said Kamal Haasans statement Cauvery river solved
காவிரி நதிநீர் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘காலா’ திரைப்பட வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் பேசித் தீர்வு காண்பது நல்லதுதான். இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமார சாமியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்ததில் தவறில்லை. நீதிமன்ற உத்தரவு இருந்தாலும், பேசித் தீர்ப்பது நல்லதுதான். அதுபோன்ற முயற்சி எடுப்பதில் தவறு கிடையாது. பெரிய பெரிய விஷயங்களில்கூட பேசித் தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதனால் காவிரி பிரச்சினையை பேசித் தீர்ப்பதில் தவறில்லை.
‘காலா’ படத்தில் நல்ல விஷயம் இருந்தால் 100 சதவீதம் வெற்றி பெறும். ‘காலா’ படத்தை திரையிட கர்நாடகாவில் பிரச்சினை ஏற்படாது என்று நினைக்கிறேன்.கர்நாடகாவில் தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி பேசும் மக்களும் இந்தப் படத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் ஏமாற் றம் அடையக்கூடாது. எனவே, ‘காலா’ படத்தை திரையிட கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும். அதில், பிரச்சினை வந்தால் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதற்கு மேல், நான் பெரிதும் மதிக்கிற தேவகவுடா இருக்கிறார். படத் தைத் தடை செய்ய விடமாட்டார்.
நீட் தேர்வில் வெற்றி பெறாததால், மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது மிகவும் சோகமானது. எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வால் உயிர்ப்பலி தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசியல் வேறு, சினிமா தொழில் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
Rajinikanth said Kamal Haasans statement Cauvery river solved
More Tamil News
- காலா! வருவாரா? மாட்டாரா? – கர்நாடக ரசிகர்கள் கவலை!
- சிறுமியை கடத்த முயற்சி – கட்டி வைத்த உதைத்த பொதுமக்கள்!
- நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி – கீர்த்தனா!
- பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!
- மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?
- காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
- கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!