அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.Donald Trump Kim Jong Meeting Location
பேச்சுவார்த்தைகான ஏற்பாடுகளில் இருநாடுகளும் மும்முரமாக உள்ளன.
இந்நிலையில், சந்திப்புக்கான இடம் மற்றும் ஹோட்டல் ஆகியவற்றை வெள்ளை மாளிகை பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்.
இதன்படி சிங்கப்பூரின் தெற்கில் உள்ள சென்டோசா தீவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அங்குள்ள கெப்பலா ஹோட்டலில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிவரும் 12 ஆம் திகதி காலை இப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.
இச்சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. மேலும் அங்குவரும் கடும் சோதனைக்குள்ளாவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலனித்துவ பாணியிலான ஐந்து நட்சத்திர ஹோட்டலான கெப்பலாவுக்கு , அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னதாக செங்ரில்லா உள்ளிட்ட பல ஹோட்டல்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் இறுதியாக கெப்பல்லா தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டல் அமைந்துள்ள சென்டோசா தீவானது சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலாத்தளமென்பது குறிப்பிடத்தக்கது.