தனியாக பயணம் செய்த பெண்ணொருவரை தாக்கி அவரிடம் பாலியல் சீண்டல்கள் செய்த “ஓலா ” கார் சாரதி ஒருவரை கைது செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது .(Ola Cabs Service Driver Sex Harassment Woman Passenger)
பெங்களூர் கோடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் அந்த பெண் மும்பை செல்வதற்காக விமான நிலையம் செல்வதற்காக “ஓலா ” கார் ஒன்றை புக் செய்தார் .
அருண் என்ற டிரைவர் காருடன் வீட்டில் இருந்து பெண்ணை பிக்அப் செய்து சென்று கொண்டிருக்கும் வேலையில் பொலிஸ் பாதுகாப்பு நிறைந்த வீதியில் செல்லாமல் வேறு வழியில் சென்றார் .இது தொடர்பாக அந்த பெண் அவரிடம் கேட்ட பொழுது வாக்குவாதம் செய்து மெயின் ரோடுக்கு திரும்ப கூறியுள்ளார்.
ஆனால் தொடர்ந்து நிறுத்தாமல் காரை ஒட்டி சென்றாதல் கதவை திறக்க முற்பட்ட பொழுது கதவு லாக் செய்யபட்திருந்தது .
பின்னர் அந்த பெண்ணின் தொலைபேசியை பறித்து அந்த பெண்ணின் ஆடைகளை கழட்டுமாறு மிரட்டி யுள்ளார் .
ஆடைகளை களைந்து நிர்வாணமாக தன் முன்னால் நிற்காவிட்டால், எனது நண்பர்களுக்கு போன் செய்து கூப்பிடுவேன். அவர்களும், நானும் உன்னை கூட்டாக பலாத்காரம் செய்வோம் என்று மிரட்டியுள்ளார் அருண்.
உதவிக்கு யாரும் இல்லாத இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த பெண், தனது ஆடைகளை களைந்துள்ளார். இதையடுத்து நிர்வாணமாக அவரை பல கோணங்களில் தனது செல்போனில் போட்டோ எடுத்த அருண், தனது வாட்ஸ்அப் எண்ணுக்கும் அதை அனுப்பியுள்ளார். இதன்பிறகு, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.
சூழ்நிலை மோசமாக இருப்பதை உணர்ந்த அந்த பெண், தன்னை எப்படியாவது ஏர்போர்ட்டில் விட்டுவிடுமாறும், நடந்தது பற்றி யாருக்கும் சொல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ஏர்போர்ட்டில் கொண்டு சென்றுவிட்ட அருண், நடந்ததை வெளியே சொன்னால் நிர்வாண போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிவிட்டு திரும்பியுள்ளார்.
ஒரு மாதிரி தப்பித்தோம் பிழைத்தோம் என மும்பை வந்து சேர்ந்த அந்த பெண் இமெயில் வாயிலாக பொலிஸ் கமிஷனர் சுனில்குமாரிடம் புகார் அளித்தார் .
பின்னர் அருண் மீது வழக்கு பதவு செய்த பொலிசார் அவரை 3 மணி நேரத்தில் கைது செய்து அவரையும் அவரின் காரையும் பத்திரிகையாளர் முன்னிலையில் காட்சி படுத்தினர் .
இந்த சம்பவம் பெங்களூர் பெண்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா ??
-
பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்
-
காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com