கடலில் மூழ்கிய Cagnes sur mer பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர் மீட்கப்பட்டு Antibes பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Villeneuve Loubet swimming accident
இந்த சம்பவம் நேற்று மதியம் 1 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நபர் Villeneuve loubet பகுதியிலுள்ள கடலில் மூழ்கியபோது அவர் உதவி கேட்டு எழுப்பிய சத்தத்தினால் அப் பகுதியிலுள்ள அலாரம் சத்தம் எழுப்பியது.இதனால் அங்கு பெரும் குழப்பநிலை ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அந்த மனிதன் கடற்கரையிலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் நீச்சலடித்து கொண்டு போகும்போதே நீரினுள் மூழ்கியுள்ளார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடற்கரையிலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் செல்ல வேண்டாமென நீச்சலடிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் தற்சமயம் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கனமழை பெய்வதால் அப் பகுதியில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!