ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள்!

0
678
Prevention Corruption Act Amendments soon Parliament

ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயமன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்திருத்தத்திற்கு அமைய, தனியார் துறையில் இடம்பெறும் ஊழலை தடுப்பதற்கான அதிகாரம், அந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் அந்த ஆணைக்குழுவினால் நேரடியாக மேல் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள ஊழலை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :