Kannada Rakshana Vedike announced Rajinis film released Karnataka
காலா மட்டுமல்லாமல், ரஜினியின் எந்த படத்தையும் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட ரக்ஷன வேதிகே அறிவித்து உள்ளது.
காவிரி பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசினார். இதற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஜினி கதாநாயகனாக நடித்துள்ள ‘காலா‘ படம் வருகிற 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ‘காலா’ படத்தை கர்நாடகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் உட்பட பல்வேறு கன்னட அமைப்பினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அந்த சபையின் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா‘ படம் கர்நாடகத்தில் திரையிடப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மன்னிப்பே கேட்டாலும், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். காலா மட்டுமல்லாமல், ரஜினியின் எந்த படத்தையும் இனி வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.
Kannada Rakshana Vedike announced Rajinis film released Karnataka
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :