தூத்துக்குடி ஆட்சியர்  அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு

0
809
Human Rights Commission Office connection shooting Thoothukudi

Human Rights Commission Office connection shooting Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த கிராம மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர், போராட்டக்காரர்களை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது குறித்து தேசிய, மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம், கிராம மக்கள் தீ வைத்ததாகக் கூறப்படும் வாகனங்கள் அனைத்தையும் நேரில் பார்வையிட்டனர். அவர்களது சந்தேகங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கமளித்தார்.

Human Rights Commission Office connection shooting Thoothukudi

More Tamil News

Tamil News Group websites :