பேரினவாத தீயில் கருகிப்போன தமிழினத்தின் அரும்பெரும் அடையாளம்!

0
844
Jaffna Public Library Burn Destroyed Memorial Day

(Jaffna Public Library Burn Destroyed Memorial Day)

காலம் காலமாக தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட யுத்தம் தந்த அவலங்களில் உயிர் , உடமை என பலவற்றை இழந்த தமிழ் மக்களின் அசைக்க முடியாத ஆணிவேராக நிலைத்திருப்பது அவர்களின் கல்வி வளம்.

தமிழினத்தின் பொருளாதாரம் , பாரம்பரியம் என ஒவ்வொன்றிலும் அணுவணுவாக கைவைத்து வந்த சிங்கள பேரினவாதத்தின் கண்களில் இருந்து தமிழர்களின் கல்வியறிவும் தப்பவில்லை.

ஆம் ! ஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து
1981ம் ஆண்டு இதேநாளில் நள்ளிரவு சிங்கள அரசு வைத்த இனவாத தீயில் எமது கல்வி வளத்தின் அடையாளமாக திமிராக நிமிர்ந்து நின்ற யாழ்ப்பாண பொது நூலகம் எரித்தளிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட யாழ் நூலகம். எமது பெருமை, பெருமிதம், கௌரவம் என்றும் சொல்லலாம். ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள் அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தனர்.

இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர் தடுத்து நிறுத்திய காவலாளியை வெட்டித் தள்ளினர், கோடாரியால் கொத்திக் கதவைத் திறந்தனர், கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

Photo Source : groundviews.org

இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது எரித்தழிக்கப்பட்டமை தமிழர்களின் மணங்களில் ஆறாத வடுவை உண்டுபண்ணியது.

நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புக்குப் பிறகு என்றே சொல்லலாம். யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

இலங்கை பேரினவாத அரசு தான் செய்த பாவத்துக்கு பிராயசித்ததை தேடியிருக்கலாம். ஆனால் அதன் பேரினவாத தீயின் நாக்குகள் விழுங்கி கொண்ட எமது அடையாளங்களை நாம் எப்போதும் இனிமேல் திரும்பி பெற முடியாது.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு