ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் விமான பணிப்பெண் ஒருவர் தனது இருக்கையோடு 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டும் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
மாண்ட்ரியலில் இருந்து 72 பயணிகளுடன் வந்த அந்த விமானம், ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமான ஓட்டிகள் இருவர் உயிரிழந்தனர். விமான பணிப்பெண் சோலங்கே ட்ரெம்ப்ளே படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருக்கையில் கட்டப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வளவு தூரம் வீசப்பட்டும் உயிர் தப்பியது ஒரு மிகப்பெரிய அதிசயம் என அவரது மகள் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையின் தவறான வழிகாட்டுதலே இந்த மோதலுக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப கோளாறை சரிபார்க்க சென்ற தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்தது. அமெரிக்க விமான போக்குவரத்துத் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையும் இத்தகைய விபத்துகளுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.



