எனது கணவரை விமர்சனம் செய்ய எவருக்கும் உரிமையில்லை; தசுன் சானக்க மனைவி சினம்

0
116

எனது கணவரை விமர்சனம் செய்ய எவருக்கும் உரிமையில்லை என்றும் அவர் திறமையானவர் என்றும் தசுன் சானக்கவின் மனைவி கூறியுள்ளார். T20 உலகக் கிண்ண தொடரை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடான இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சொந்த மண்ணில் இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் தோல்வி அணியின் நிர்வாகத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அணித்தலைவர் தசுன் சானக்க மற்றும் தேர்வுக் குழுவினரை அதிரடியாக நீக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தசுனை விமர்சனம் செய்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற பாருங்கள் என்றும் கிரிக்கெட் தான் வாழ்க்கை அல்ல கிரிக்கெட்டில் அவர் இடம் பிடித்துள்ள இடம் எனக்கு திருப்தியாக உள்ளது தசுன் சானக்கவின் மனைவி தசுனை விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.