T20 உலகக் கிண்ணம்; நமீபியா எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

0
23

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 18ஆவது போட்டி இன்று நடைபெற்றது டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நமீபியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

210 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் இந்திய அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.