(Afghanistan girl marrieds three person latest gossip)
ஆப்கனிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை திருமணம் செய்துள்ளார் .
ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தங்கள் கலாச்சார வழக்கப்படி உயிரிழந்த கணவரின் சகோதரரை திருமணம் செய்த நிலையில் தாலிபான் தீவிரவாதிகளிடம் இரண்டு கணவர்களை இழந்துள்ளார்.
கடீஜா (18) என்ற இளம் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போதும் அவர் குடும்பத்தார் அவரை விட 15 வயது மூத்தவரான ஹக் என்பதை திருமணம் செய்து வைத்தனர்.
ஊரில் மரவேலை செய்து வந்த ஹக் அங்குள்ள தாலிபான் தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டார்.
இதையடுத்து அந்த இயக்கத்தில் உளவாளியாக சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2010-ல் நடந்த தாக்குதலில் ஹக் உயிரிழந்தார்.
இதையடுத்து விதவையான கடீஜா மறுமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தார் வலியுறுத்தினார்கள்.
அவர்கள் ஊர் வழக்கப்படி பெண்ணின் கணவர் இறந்தால், கணவரின் சகோதரரை அப்பெண் மறுமணம் செய்ய வேண்டும். அதன்படி பொலிஸ் பணியில் இருந்த ஹக்கின் சகோதரரான அமினுல்லாவை கடீஜா திருமணம் செய்தார்.
இதையடுத்து கர்ப்பமான கடீஜா பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
கடந்த 2014-ல் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொலிசான அமினுல்லா கொலை செய்யப்பட்டார்.
இதனால் கை குழந்தையுடன் இடிந்து போய் உட்கார்ந்தாவுக்கு அமினுல்லாவின் சகோதரர் சம்சுதின் கடந்த 2015-ல் வாழ்க்கை கொடுத்தார்.
சம்சுதின் ரிக்ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி வருபவர் ஆவார், குறைந்த வருமானம் வந்தாலும் தனது மனைவி கடீஜாவை அவர் நன்றாக பார்த்து கொள்கிறார்.
விரைவில் பொலிஸ் வேலையில் சேரும் எண்ணமும் அவருக்கு உள்ளது, ஆனால் தனது சகோதரர்கள் உயிர் இழந்தது போல தனக்கும் எதாவது ஆகிவிட்டால் குடும்பம் என்னாவது என்ற கவலை மட்டும் அவருக்கு உள்ளது.
கடீஜா கூறுகையில், சிறுவயதிலிருந்து நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன், என் கணவர் சம்சுதினும் தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்படக்கூடாது என்பதே என் எண்ணம் என கூறியுள்ளார்.
News source by : www.newstig.net
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- நிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா! (படங்கள் இணைப்பு)
- தமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்
- ஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்
- ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ
- ஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் ??
- காதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்
- ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா!
- இத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை! எதற்காக?
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com