திரைப்பட இயக்குனரும் பத்திரிகையாளருமான அவி லூயிஸ், கனடா நியூ டெமோக்ராட்டிக் கட்சியின் (NDP) தலைமைப் பதவிக்காக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி மூலம் அதிகாரப்பூர்வமாக அவர் இதனை அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஆல்பர்டா NDP எம்.பி. ஹெதர் மெக்பர்சன், தேர்தல் கனடா இணையதளத்தில் தலைமைத்துவ வேட்பாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை. பேட்டிக்கான கோரிக்கையையும் அவரது பேச்சாளர் நிராகரித்துள்ளார். அவி லூயிஸ் தனது காணொளியில், வாழ்வாதாரச் செலவு அதிகரித்திருப்பதைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.
அலைபேசிக் கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம், தொலைத்தொடர்பு மற்றும் உணவக சந்தைகளில் சில பெரிய நிறுவனங்கள் அதிக கட்டுப்பாடு செலுத்துவதாலேயே ஏற்பட்டது என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் அரசுகள் கார்பன் வாயு உமிழ்வுகளை கட்டுப்படுத்த தவறியதால் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.