இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடளித்துள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
வெற்றிக்கு பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர். தாங்கள் விளையாடுவதற்கு மட்டுமே வந்ததாகவும் அவர்களுக்கு பதில் அளித்ததாகவும் தெரிவித்த இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் சில விடயங்கள் விளையாட்டு திறனுக்கு அப்பாற்பட்டது என கூறியுள்ளார்.
இந்தப் போட்டியின் வெற்றி, ஒபரேஷன் சிந்தூரில் இணைந்த அனைத்து ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தங்களது ஆட்டம் ஏமாற்றம் அளித்த போதிலும் கைகுலுக்க விரும்பியதாக தெரிவித்த பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா எதிர் அணி வீர்கள் அதனை தவிர்த்ததால் ஏமாற்றம் அடைந்தோம் என கூறியுள்ளார்.
இந்திய அணியின் இந்த செயற்பாடு குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய அணி ஏற்கனவே போட்டி நடுவரிடம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.