2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதான வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எவ்வாறாயினும் இந்த நட்பு போட்டிக்குப் பின்னர் சர்வதேச ஊடகங்கள் இப்போது இந்திய வீரர்களின் நடத்தையில் கவனம் செலுத்தியுள்ளன.
ஜென்டில்மேன் விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட்டில் போட்டி முடிந்ததும் இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது வழக்கமானும். எனினும் நேற்றைய போட்டிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
போட்டி முடிந்த பின்னர், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே வழக்கம் போல் மைதானத்தின் நடுவில் கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
அதே நேரத்தில் இந்திய வீரர்களும் பயிற்சி ஊழியர்களும் தங்கள் ஓய்வறைக்குச் சென்று கதவை மூடினர். இந்திய அணியின் இந்த நடத்தை சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவிடம் செய்தியாளர்களிடம் இது குறித்து கேள்வியெழுப்பினர்.
இந்தப் போட்டியின் வெற்றி, ஒபரேஷன் சிந்தூரில் இணைந்த அனைத்து ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தானும் தனது அணியும் இங்கு விளையாட மட்டுமே வந்ததாகவும், அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றியதாகவும் கூறினார். இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகா இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இந்திய அணியிடம் இருந்து இவ்வாறான நடவடிக்கையை தானும் தனது அணியும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்திய அணியினர் செயல்பட்ட விதத்தில் தாம் ஏமாற்றமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.