இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் முன்னேற்றத்தை கவனத்திற்கொண்டு Leicestershire பிராந்திய கிரிக்கட் கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் டிம் பூன், மகளிர் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நான்கு மாதக் காலத்திற்கு அவரது பதவி நிலை ஒப்பந்தம் அமையப் பெற்றுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி மகளிர் உலக கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இதனால் குறித்த தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை தேசிய மகளிர் அணிக்கு தேவையான ஆலோசனைகளை டிம் பூன் வழங்குவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பூனின் ஆலோசனை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும், முதல் பதவிக்காலம் ஒகஸ்ட் 30 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 5, 2025 வரை நீடிக்கும், இரண்டாவது பதவிக்காலம் ஜனவரி 10 ஆம் திகதி தொடங்கி மார்ச் 09, 2026 அன்று நிறைவடையும்.