மனித கொலைகளுடன் தொடர்புடையவர்கள் கைது

0
826
murder human athurugiriya arrest weapon gun tamil

murder human athurugiriya arrest weapon gun tamil

அத்துருகிரிய மற்றும் தலங்கம பகுதிகளில் பல்வேறு கொலை சம்பங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைத செய்யப்பட்டுள்னர் என பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்துருகிரிய – கல்வருசாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனித கொலைக்கும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கு அவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

18 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் அத்துருகிரிய மற்றும் கடுவலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவரும் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும்.

சந்தேக நபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

murder human athurugiriya arrest weapon gun tamil

More Time Tamil News Today

Time Tamil News Group websites :