Sushma Swaraj able negotiate Pakistan unless supporting extremist
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொள்ளும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, சுஷ்மா ஸ்வராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:
பாகிஸ்தானுடன் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதுமே தயாராக உள்ளது. அதேநேரம், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஏவி விடும் தீவிரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்களும் ராணுவ வீரர்களும் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, ஒருபுறம் தீவிரவாத தாக்குதலும் மற்றொரு புறம் பேச்சுவார்த்தையும் நடைபெறுவது என்பது சாத்தியமற்றது. தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் வரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Sushma Swaraj able negotiate Pakistan unless supporting extremist
More Tamil News
- இந்தியாவிலேயே அதிக நியாயவிலைக் கடைகளை கொண்ட மாநிலம் தமிழகம்!
- சிறுமி விழுங்கிய காந்தத்தை மற்றொரு காந்தம் மூலம் எடுத்த மருத்துவர்கள்!
- காவல் உதவி ஆணையர் – காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
- சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
- காளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்!
Tamil News Group websites :