மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஓட்டம் எடுத்த மாமனார்!

0
186

மைனர் மகனுக்கு மேஜரான பெண்ணை திருமணம் செய்து வைக்க முற்பட்ட தந்தை, அந்த பெண்ணை தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உத்தர பிரதேசத்தில் சேர்ந்த ஷகீல் என்ற நபருக்கு ஷபனா என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் திடீரென ஷகீல் தனது 15 வயது மகனுக்கு மேஜரான பெண்ணை திருமணம் செய்து வைக்க முற்பட்டார்.

ஆனால் அவரின் திட்டமோ மகனுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை என்று அவரது குடும்பத்தாருக்கு போகபோக தான் தெரிந்தது. மாமனார், மகனுக்காக பேசி முடித்த பெண்ணிடம் தினமும் உரையாடி உறவை வளர்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறியது.

அடிக்கடி தொலைப்பேசியில் பேசி வருவதை கண்ட ஷகீலின் மனைவி ஷபனா சந்தேகத்து மகனிடம் இது குறித்து கூறினார். பிறகு இருவரும் சேர்ந்து அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி நேரடியாக சென்று விசாரித்தனர் விசாரணையில் இருவரும் காதலித்து வருவது நிரூபனமானது. உண்மையை மனைவி தெரிந்து கொண்டதை நினைத்து ஆத்திரமடைந்த ஷகீல் மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

தங்களின் உறவு கசிந்ததை அடுத்து வீட்டில் இருந்த தங்கம் மற்றும் பணத்தையும்  எடுத்து கொண்டு இருவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டுள்ள நிலையில் மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடனே ஓடி விட்டதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.