கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு மனோ கணேசன் வாழ்த்து

0
232

கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனடாவில் அண்மையில் நடைபெற்ற நாடாளும்ன்ற தேர்தலில் வெற்றி பெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த செவ்வாய்கிழமை (13) ஒட்டாவா நகரில் நடைபெற்றது.

கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராக இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துக் கூறியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.