யாருக்கும் பாதுகாப்பு இல்லை: ட்ரம்ப் தொடர்பில் எச்சரிக்கும் கனடா

0
40

கனடா அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. ஆக கனடாவுக்கே இந்த நிலை என்றால், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என கருதுகிறது கனடா. தனது வரி விதிப்பு நடவடிக்கைகளால் உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரிகள் விதித்துள்ள ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியம் மீது வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளார்.  ட்ரம்பின் வரி விதிப்புகளால் பல நாடுகள் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள இருக்கின்றன. இந்நிலையில் இந்த வாரம் கனடாவில் G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க இருக்கிறார்கள்.

அந்த மாநாட்டின்போது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான கனடாவுக்கே இந்த நிலை என்றால் ட்ரம்பின் கொள்கைகளால் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை சக நாடுகளிடம் கூறி அவர்களை எச்சரிக்க இருக்கிறார் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரான மெலானி ஜோலி.