மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை தேடித் தந்த மாணவி! குவியும் வாழ்த்துக்கள்

0
56

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் பயிலும் நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல் முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளார். குறித்த போட்டியானது கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி யாழ்ப்பாண இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் 2ஆம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை மன்னார் மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், பெருமையை பெற்றுத் தந்துள்ளார்.

இதேவேளை நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Recitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.