பாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு – மர்ம அழைப்பு!

0
807
Bombs Pamban Road Bridge - Mystery Call

Bombs Pamban Road Bridge – Mystery Call

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்கும் வகையில், பாம்பன் சாலைப் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் பாலத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன், இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்ததாகத் தெரியவந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :