​ஸ்வீட் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த நபர்!

0
825
person stole sweet shopkeeper thirunelveli

person stole sweet shopkeeper thirunelveli

திருநெல்வேலி, திசையன்விளை பகுதியைச் சேர்ந்த நடராஜன், அங்குள்ள பேருந்து நிலையத்தில் அவர் ஸ்வீட் கடை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், நடராஜனின் கடைக்கு சென்று, சிகரெட் பாக்கெட் கேட்டுள்ளார். ஆனால், நடராஜன் தரமுடியாது என கூறிய நிலையில், பிறகு மது அருந்த பணம் தருமாறும் நடராஜனிடம் கேட்டுள்ளார்.

பின்பு அதற்கும் நடராஜன் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த ஸ்டீபன், கடையில் இருந்த குளிர்பான பாட்டிலால், நடராஜனின் தலையில் அடித்ததோடு, சுவற்றில் தலையை மோதியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஸ்டீபனை பிடித்து அடித்து உதைத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ஸ்டீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :