பாலியல் வல்லுறவு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக கைது உத்தரவு

0
596
minister interiorIn complaint lodged woman sexually abused

minister interiorIn complaint lodged woman sexually abused

இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. அமைச்சருக்கு எதிராக தொடரப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. சார்பில் 3 முறை எம்.பி.யாக இருந்தவர் சுவாமி சின்மயானந்த். வாஜ்பாய் தலைமையிலான இந்திய மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். இவர் தனது ஆசிரமத்தில் பணியாற்றிய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக செய்ததாக கடந்த 2011ஆம் ஆண்டு முறைப்பாடு எழுந்தது.

இது தொடர்பாக இந்திய உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம், கோட்வாலி போலீஸார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால் சின்மயானந்தை கைது செய்ய அலகாபாத் மேல்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ளது.

இவ் வழக்கை திரும்பப் பெறுவதாக உத்தரபிரதேச அரசு தரப்பில் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிபதிக்கு அண்மையில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் அளித்த மனுவை ஷாஜகான்பூர் நகர நீதிபதி ஷிகா பிரதான் நேற்று முன்தினம் விசாரித்துள்ளார்.

வழக்கை திரும்பப் பெறும் அரசின் கோரிக்கையை நிராகரித்த அவர், சின்மயானந்துக்கு எதிராக பிணையில் வெளி வரக்கூடிய கைது உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

minister interiorIn complaint lodged woman sexually abused

More Tamil News

Tamil News Group websites :