அபியும் அனுவும் : திரை விமர்சனம்..!

0
667
Abiyum Anuvum Movie Review Tamil Cinema,Abiyum Anuvum Movie Review Tamil,Abiyum Anuvum Movie Review,Abiyum Anuvum Movie,Abiyum Anuvum

(Abiyum Anuvum Movie Review Tamil Cinema)

படத்தின் தலைப்பிலேயே இது உண்மைச் சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என சொல்லி விடுகிறார்கள்.

நாயகன் டோவினோ தாமஸ் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நாயகி பியா ஊட்டியில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பியா, தான் செய்யும் செயல்களை புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்.

பேஸ்புக்கில் பியாவின் புகைப்படங்களை பார்க்கும் டோவினோ தாமஸ், அவருடன் நட்பாக பழக ஆரம்பிக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இருவரும் பேஸ்புக் மூலமாக காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பியா கர்ப்பமாகிறார். இவரை பார்த்துக் கொள்வதற்காக டோவினோ தாமஸின் பெற்றோர் ஒரு ஆளை அனுப்புகிறார்கள். அதே சமயம் பியாவின் தாயும் சென்னைக்கு வருகிறார்கள். இவரை பார்த்தவுடன் டோவினோ தாமஸின் வீட்டின் ஆள் அதிர்ச்சியாகிறார்.

உடனே டோவினோ தாமஸின் பெற்றோருக்கு போன் செய்து, பியா மற்றும் அவரது தாய், யார் என்று விவரிக்கிறார். இதைக் கேட்ட டோவினோ தாமஸின் குடும்பமும் அதிர்ச்சியாகிறது. உடனே டோவினோ தாமஸின் அம்மா போன் செய்து, அவரிடம் இந்த கல்யாணம் செல்லாது. பியாவை விவாகரத்து செய் என்றும், வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடு என்றும் கூறுகிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் டோவினோ தாமஸ், பியாவை விட்டு பிரிந்தாரா? உண்மையில் பியா யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அபி கதாபாத்திரத்தில் டோவினோ தாமஸும், அனு கதாபாத்திரத்தில் பியாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான காதல் காட்சியில் ரசிக்க வைக்கிறது. ரொமன்ஸ், சென்டிமென்ட், என திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரபு, சுஹாசினி, ரோகினி ஆகியோர் அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்.

புதுமையான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய லட்சுமி. ஆனால், திரைக்கதை மெதுவாக செல்வதால் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். தேவையில்லாத காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது. படம் பார்க்கும் போது, ஆவணப்படம் போல் தோன்றுகிறது.

தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. அகிலன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் ”அபியும் அனுவும்” ஓரளவிற்கு ரசிக்கலாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!

செம : திரை விமர்சனம்..!

கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!

கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

வடிவேலுவுக்கு வந்த சோதனை : ஒரு வாரம் கால அவகாசம்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல் : ரசிகர்கள் வரவேற்பு..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Abiyum Anuvum Movie Review Tamil Cinema

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 25-05-2018