(police constable committed suicide shooting self barracks)
கொகரேல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று (25) மாலை பொலிஸ் நிலையத்தில் வைத்தே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி விபத்தொன்றில் சிக்கி கடந்த இரண்டு வருடங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று (25) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த அதிர்ச்சி தாளாமல் அவர் தனது சேவைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு இரவு 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
48 வயதான உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 3 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(police constable committed suicide shooting self barracks)
More Tamil News
- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி
- கடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை
- வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com