பாதையை கடக்க தடுமாறிய பௌத்த பிக்குக்கு உதவிய முஸ்லிம் இளைஞன்!

0
104

கண்டி நகரில் பிரதான பாதையை கடக்க முடியாமல் தடுமாறிய வயோதிப பௌத்த பிக்குக்கு முஸ்லிம் இளைஞர் ஒருவர் உதவி செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கண்டி மணிக்கூட்டு கோபுரம் அருகே இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனின் செயலை முகநூலில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் எத்தனை பிணக்குகள் வந்தாலும் மனிதாபிமானம் உள்ள மானிட பிறவிகள் இருக்கும் வரை இன உறவு உயிர் வாழும் என்பது நிச்சயம் என முகநூலில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.