பிரதமரின் கனடிய தின வாழ்த்துச் செய்தி

0
172

கனடா தினத்தை முன்னிட்டு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் இனிய கனடா தின வாழ்த்துக்கள் எனவும், உலகில் எங்கிருந்தாலும் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளி ஒன்றின் மூலம் அவர் இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். பழங்குடியின மக்களுடன் இணைந்து 157 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேசம் மலர்ந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தியாகத்தின் கதை எனவும், எமது மூதாதையர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் இந்த தேசத்தை கட்டியெழுப்பி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு அனைவருக்கும் சம அந்தஸ்தினை வழங்கி வருவதாகவும், எங்கிருந்து வந்தார்கள், எவ்வாறு வழிபாடு செய்கின்றார்கள் என்பது பற்றிய கரிசனையின்றி அனைவரும் சமமாக மதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.